இந்த ஐ.பி.எல் தொடரில் நான் சாதிக்க ஆசைப்படும் சாதனை இதுதான் – ஷாகிப் அல் ஹசன் விருப்பம்

Shakib 1
- Advertisement -

பங்களாதேசை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான ஷகிப் அல் ஹசன் இதற்குமுன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2014 ஆம் ஆண்டு கௌதம் கம்பீர் தலைமையின்கீழ் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில் இவர் பதினோரு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் 227 ரன்கள் குவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்தார். அந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக சிறப்பாக விளையாடி தொடரையும் கைப்பற்றியது.

Shakib

- Advertisement -

அதன் பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான 2018 மட்டும் 2019 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். சென்ற ஆண்டு சஸ்பென்ஷன் இல் இருந்த ஷகிப் அல் ஹசனால் ஐபிஎல் தொடர் விளையாட முடியாமல் போனது.இந்நிலையில் இந்தாண்டு நடந்த முடிந்து ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷகிப் அல் ஹசன் 3.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

எனவே மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்க உள்ள ஷகிப் அல் ஹசன் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கும் மிக ஆவலாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

Shakib

மேலும் நீங்கள் ஆசைப்படும் ஒரு விஷயம் என்னவென்று கேட்டதற்கு : நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் சதமடித்து மேலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது ஆசை என்று கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர், ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துகளை எதிர்கொண்ட மிக ஆவலாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

shakib

அதேபோல ஐந்து முறை தொடரை கைப்பற்றிய நடப்புச் சாம்பியன்ஸ் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள மிக ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி ஏப்ரல் 13ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement