கண்டிப்பா பங்களாதேஷ் அணிக்காக இதை செய்யாமல் நான் ரிட்டயர்டு ஆக மாட்டேன் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

Shakib

2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய ஷகிப் அல் ஹசன் மொத்தமாக இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்து 606 ரன்கள் அடித்தார். உலக கோப்பை தொடரில் அவரது அவரேஜ் 83 ஆகும். மேலும் பவுலிங் முறையில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி பங்களாதேஷ் அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். மேன் ஆப் தி டோர்னமெண்ட் பட்டம் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் அந்த பட்டத்தை இறுதியில் வாங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது ஓய்வு குறித்த முடிவை கூறியுள்ளார். 34 வயதான ஷகிப் அல் ஹசன் சமீபத்தில் பேசியுள்ள பேட்டியில், நான் இப்போது ஓய்வு பெற விரும்பவில்லை. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை வரை கண்டிப்பாக விளையாடுவேன். அந்த உலகக் கோப்பை தொடரை பங்களாதேசம் கைப்பற்ற தவறினால், மீண்டும் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பை வரை நிச்சயம் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஷகிப் அல் ஹசன் : தற்பொழுது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 6 போட்டிகளிலும் தோற்று உள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 6 போட்டிகளில் தோற்று, ஒயிட் வாஷ் பெயரை வாங்கியுள்ளது. நான் பங்களாதேஷ் அணி வீரர்களிடம் நடந்ததைபற்றிப் பேசாமல் இனி எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்தும் எவ்வாறு ஆட்டத்தை அணுக வேண்டும் என்பது குறித்தும் அவர்களுடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பேசுவேன் என்று ஷகிப் அல் ஹசன் பேட்டியில் கூறினார்.

Shakib

மேலும் பேசிய அவர் நான் தற்பொழுது பங்களாதேஷ் அணிக்காக விளையாடி வருகிறேன். நான் ஓய்வு பெறும்பொழுது சந்தோஷமாக மகிழ்ச்சியாக மட்டுமே ஓய்வு பெறுவேன். எனவே 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பங்களாதேஷ் அணி வென்றால் நிச்சயம் சந்தோசமாக ஓய்வு பெற்றுவிடுவேன். ஒருவேளை பங்களாதேஷ் அணியை வெல்ல தவறினால், நிச்சயம் அதற்கு அடுத்த உலக கோப்பை தொடரில் மீண்டும் விளையாடுவேன் என்று கூறி முடித்தார்.

- Advertisement -

shakib

ஷாகிப் அல் ஹசன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை விட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் வாங்கியது வங்கதேச ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ஷகிப் அல் ஹசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.