ஸ்பின்னர்கள் செய்யும் இந்த தவறு மிகப்பெரிய கிரைம் – வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் வருத்தம்

Shakib-3
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15 ஆவது ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற 5-ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது.

Ban Team

- Advertisement -

பின்னர் 184 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 19.2 ஓவர்களில் 8 விக்கெடுகளை இழந்து 184 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி செய்த சில தவறுகளே அவர்களது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதிலும் குறிப்பாக அவர்கள் வீசிய இரண்டு நோபால் இந்த போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம். ஒன்று இந்த போட்டியின் சேசிங்கின் ஏழாவது ஓவரின் போது குசால் மென்டிசுக்கு எதிராக நோபால் வீசப்பட்டது. அதனை ஸ்பின்னர் மெகதி ஹாசன் வீசியிருந்தார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட குசால் மென்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார்.

ban

அதேபோன்று இரண்டாவது நோபாலானது கடைசி ஓவரில் வீசப்பட்டது. வெற்றிக்கு நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்ற வேளையில் அந்த நோபால் வீசப்பட்டதால் இலங்கை எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் ஸ்பின்னர்கள் டி20 கிரிக்கெட்டில் நோபால் வீசுவது என்பது மிகப்பெரிய க்ரைம் என வங்கதேச அணியின் கேப்டன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

எந்த ஒரு கேப்டனுமே பந்துவீச்சாளர்களிடம் இருந்து நோபால் வீசுவதை எதிர்பார்க்க மாட்டார்கள். அந்த வகையில் ஸ்பின்னர்கள் நோபால் வீசுவது என்பது ஒரு மிகப்பெரிய குற்றம். எங்களது அணி வீரர்கள் இன்று அதிகப்படியான ஒயிடுகளையும், நோபால்களையும் வீசினர். இது சரியான நடைமுறை கிடையாது. எதிரணி அழுத்தத்தில் இருக்கும்போது நாம் சிறப்பான முறையில் பந்து வீச தவறினால் அவர்கள் ஆட்டத்திற்குள் வந்துவிடுவார்கள்.

இதையும் படிங்க :

அந்த வகையில் இன்றைய போட்டியில் உதிரி பந்துகளை அதிகமாக வீசியதால் எங்களுக்கு தோல்வி கிடைத்தது. பந்துவீச்சில் இன்னும் கட்டுப்பாடு தேவை. டி20 கிரிக்கெட் பொருத்தவரை போட்டி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கையை விட்டு நழுவு நேரிடும். அந்த நேரத்தில் இது போன்ற உதிரிப் பந்துகளை வீசக்கூடாது என ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement