வெட்டி துண்டு துண்டா எறிஞ்சிடுவேன். சாகிப் அல் ஹசனுக்கு மிரட்டல் விடுத்த நபர் – எதற்கு தெரியுமா ?

Shakib

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஷாகிப் அல் ஹசன் சூதாட்ட தரகர்கள் அணுகியதை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காததால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட துவங்கியுள்ள நிலையில் அவருக்கு திடீரென ஒரு படுபயங்கரமான கொலைமிரட்டல் வந்திருக்கிறது. அந்தக் கொலை மிரட்டல் ஃபேஸ்புக் லைவ் பக்கத்தின் மூலம் நேரடியாக வெளியாகியுள்ளது.

Shakib 1

அந்த கொலை மிரட்டல் லைவில் பேசிய மொஹ்சின் தாலுக்தார் என்ற வங்கதேசத்தை சேர்ந்த மர்ம நபர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு ஃபேஸ்புக் லைவ் பக்கத்தில் வந்து ஷாகிப் அல் ஹசன் துண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஷாகிப் அல் ஹசன் செய்யும் பல நடவடிக்கைகள் இங்கே இருக்கும் இஸ்லாமிய மக்களை பாதிப்பதாகவும், கடுமையாகப் பேசி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இஸ்லாமிய கடவுளை மதிக்காமல் மோசமாக பேசிய அவரை துண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்றால் கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற காளி பூஜையின்போது ஷகிப் அல் ஹசன் கலந்துகொண்டார். மேலும் அந்த விழாவை தொடங்கி வைத்ததும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

shakib 1

காளியை வணங்கி விட்டு இங்கு அவர் வந்திருக்கிறார். அதன் காரணமாக அவர் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தி விட்டார். ஒரு இஸ்லாமியராக இருந்து காளி பூஜையாய் எவ்வாறு துவங்கி வைக்கலாம். அது மட்டுமின்றி அந்த விழாவில் எப்படி கலந்து கொள்ளலாம் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். உடனடியாக இந்த சூழ்நிலையை சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் இதனை வழக்காக பதிவு செய்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.

- Advertisement -

shakib 2

ஆனால் இந்த கொலை மிரட்டல் வெளியான சில மணி நேரத்திலேயே மீண்டும் பேஸ்புக் பக்கத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் அந்த மர்மநபர். இதுபோன்ற செயல்கள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களுக்கு வருவது சாதாரண விடயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.