18 மாதம் தடைசெய்யப்ட்டுள்ள சாகிப் அல் ஹசன் . காரணம் இதுதான் – விவரம் இதோ

Shakib 1
- Advertisement -

பங்களாதேஷ் அணி நவம்பர் 3 ஆம் தேதி இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டி கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

shakib

- Advertisement -

இந்நிலையில் பங்களாதேஷ் அணி வீரர்கள் ஊதிய உயர்வு மற்றும் இதர 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஷகிப் அல் ஹசன் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் 9 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி வெளியாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் 18 மாதங்கள் வரை கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் ஏனெனில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவரை பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளது.

Shakib

அவர் வரவில்லை என்றால் அவர் மீது அந்த கிரிக்கெட் நிர்வாகம் நேரடியாக புகார் கொடுக்கவுள்ளது. ஏற்கனவே ஐசிசி நடத்திய பேச்சுவார்த்தையில் சாகிப் அல் ஹசன் ஈடுபடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் வங்கதேச கிரிக்கெட் வாரிய பேச்சு வார்த்தையிலும் கலந்து கொள்ளவில்லை என்றால் ஐசிசி விதிகளை மீறியதாக குறிப்பிட்டு அவருக்கு கேப்டன் பதவி அளிப்பது மட்டுமின்றி 18 மாதங்கள் வரை அதாவது ஒன்றரை வருடங்கள் தடை செய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement