அவர் எதுவும் பண்ணல இதுக்கு பின்னாடி பெரிய சதி இருக்கு. போராட்டம் நடத்திய ரசிகர்கள் – விவரம் இதோ

Ban-1

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்து அடுத்த தொடருக் காக தயாராகி வருகிறது. அடுத்ததாக வங்கதேச அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Ban

இந்த தொடருக்கான பங்களாதேஷ் அணியின் டி20 மற்றும் டெஸ்ட் கேப்டனாக இருந்த ஷாகிப் அல் ஹசன் நேற்று ஐசிசி-யால் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக தற்போது இந்த அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் வாரியத்திற்கு சூதாட்ட தகவல்களைத்தான் தெரிவிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டதால் ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடையை ஓராண்டாக குறைத்தது. இந்நிலையில் ஐசிசி-யின் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் வங்கதேச தலைநகர் டாக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ban 2

மேலும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய அலுவலகம் முன்பும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் இதேபோல பின் சொந்த மாவட்டமான மகுராவில் சுமார் 700-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றுகூடி ஐ.சி.சி-க்கு எதிராக கோஷமிட்டு இதற்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் அவர் தப்பு செய்திருக்க மாட்டார் என்றும் கோஷங்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -