டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத சாதனை செய்து அசத்திய சாகிப் அல் ஹசன் – குவியும் வாழ்த்து

Shakib-3
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி ஆனது தற்போது அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 4 க்கு 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியிடம் டி20 தொடரை பறி கொடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த தோல்வி பெரும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

shakib 1

- Advertisement -

இந்த தொடரின் கடைசி டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற வேளையில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 123 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி படு மோசமான தோல்வியை சந்தித்தது.

இப்படி ஆஸ்திரேலியா அணியானது 62 ரன்களுக்குள் சுருள்வதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் முன்னணி வீரரான சாஹிப் அல் ஹசன் திகழ்ந்தார். மொத்தம் 3.4 ஓவர்கள் வீசி அவர் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

shakib

அந்த சாதனை யாதெனில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் பேட்டிங்கில் 1000 ரன்களும், பவுலிங்கில் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது கிடையாது. அந்த சாதனையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த கடைசி t20 போட்டியின் போது சாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ஆயிரம் ரன்களை கடந்த இவர் தற்போது பவுலிங்கிலும் 100 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.

இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக பேட்டிங்கில் ஆயிரம் ரன்கள் மற்றும் பவுலிங்கில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்று சாதனையை தற்போது சாகிப் அல் ஹசன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement