பறிபோகவுள்ள ஷாகிப்பின் கேப்டன் பதவி. என்ன தப்பு பண்ணி இருக்காரு பாருங்க – விவரம் இதோ

Shakib 1
- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தற்போது பங்களாதேஷ் அணிக்கு கேப்டனாக உள்ளார். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு அவர்களின் அணி ஊதிய உயர்வு உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து தற்போது அந்தக் கோரிக்கைகளில் இரண்டை தவிர மற்றவை அனைத்தும் ஏற்கப்பட்டு போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது.

Shakib

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் ஷாகிப் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். அதனால் அவருக்கு கேப்டன்ஷிப் பறி போகும் அளவிற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட நாளில் சாகிப் டெலிகாம் நிறுவனம் ஒன்றின் நிறுவன தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி ஒருவர் கிரிக்கெட் ஆடும்போது டெலிகாம் நிறுவனங்களின் தூதராக செயல்படக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் விதியை மீறி தற்போது கிராமின்போன் என்ற டெலிகாம் நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய உள்ளது. இந்நிலையில் இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறும்போது :

கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி ஷாகிப் இவ்வாறு செய்துள்ளார். அதற்காக விளக்கம் கேட்டு நாங்கள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் அவர் திருப்திகரமான விளக்கத்தை மட்டும் அளிக்கவில்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement