பண்றத எல்லாம் பண்ணிட்டு என்ன சொல்லியிருக்காரு தெரியுமா ? – மன்னிப்பு கேட்ட ஷாகிப் அல் ஹசன்

Shakib-2
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல தற்போது உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில் பங்களாதேஷிலும் ஆண்டுதோறும் டாக்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் விளையாடிய வங்கதேச அணியின் சீனியர் வீரரான ஷாகிப் அல் ஹசன் அம்பயருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஸ்டம்பை காலால் எட்டி உதைத்தார். அதுமட்டுமின்றி ஸ்டம்பை அடியோடு பிடுங்கி அவர் மைதானத்தில் வீசியும் தனது வெறி முகத்தை காண்பித்தார்.

shakib 3

- Advertisement -

அவரின் இந்த செயல்கள் சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாக ரசிகர்கள் அவர் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அவர் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் நான்கு போட்டிகள் மட்டும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் காணொளியில் வைரலாக பரவி வர இப்போது சாகிப் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : “அன்பார்ந்த ரசிகர்களே எனது பொறுமையை இழந்து கோபப்பட்டு ஆட்டத்தைப் பார்த்து வந்த அனைவரது அனுபவத்தை கெடுத்ததற்கு, முக்கியமாக வீட்டில் இருந்து ஆட்டத்தை பார்த்து இதனால் வருத்தமடைந்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

shakib 1

ஒரு அனுபவ வீரராக நான் இதுபோல் நடந்திருக்கக் கூடாது. இருந்தாலும் சில சமயங்களில் துரதிஷ்டவசமாக எல்லாவற்றையும் மீது இப்படி நடந்து விடுகிறது. எனது அணி நிர்வாகத்தினர், ரசிகர்கள், நிர்வாக அதிகாரிகள் என அனைவருக்கும் என்னுடைய இந்த தவறான செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், எதிர்காலத்தில் இது போல மீண்டும் நடந்து கொள்ள மாட்டேன் என்று சாகிப் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் .

Shakib

என்னதான் இவர் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இன்னும் கோபம் குறைவதாக இல்லை. மேலும் அவரின் இந்த செயலுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கொதித்து எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement