எங்க டீம் இன்னைக்கு தோத்து போயி நிக்குதுனா அதுக்கு காரணம் இதுதான் – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் வேதனை

Shai Hope
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள வேளையில் புள்ளி பட்டியலின் அடிப்படையில் ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் கலந்து கொண்ட பத்து அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை, நெதர்லாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

WI vs SCO

- Advertisement -

இதிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்ளும். இந்நிலையில் இந்த சூப்பர் 6 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் நேற்று விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை முதல் முறையாக இழந்துள்ளது. அவர்களது அந்த தோல்வி வெஸ்ட் இண்டீஸ் நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி கற்றுக் குட்டியான ஸ்காட்லாந்து அணியிடமும் தோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் விமர்சனத்தையும் சந்தித்துள்ளது.

WI

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கூறுகையில் : நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் அடைந்த தோல்விகளுக்கு யாரையும் குறை கூற முடியாது. ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைவருமே தோல்விக்கு காரணம்.

இதையும் படிங்க : TNPL 2023 : முடிஞ்சா தடுத்து பாருங்க, மதுரையின் வீரத்தை அடக்கிய கோவை – கட்டுக்கடங்காமல் பிளே ஆஃப் நோக்கி தொடரும் வெற்றி நடை

இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு மோசமாகத்தான் இருந்தது. எங்களது அணியில் உள்ள எந்த ஒரு வீரருமே 100 சதவீத உழைப்பை வெளிப்படுத்தவில்லை. எங்களது வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்யவில்லை. தொடர்ந்து கேட்ச்களை தவறவிட்டு விட்டோம். இந்த தொடர் முழுவதுமே யாரும் ஒரு ஈடுபாடுடன் விளையாடவில்லை என தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement