IND vs WI : பிரையன் லாரா, ரிச்சர்ட்ஸ் போன்ற வெ.இ ஜாம்பவான்களை மிஞ்சிய இளம் வீரர் – இப்படி ஒரு திறமையா, ரசிகர்கள் பாராட்டு

Shai Hope Brian Lara
- Advertisement -

குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜூலை 24இல் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றதால் சொந்த மண்ணில் நடக்கும் இந்த தொடரை வெல்வதற்கு இப்போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 311/6 ரன்கள் குவித்தது.

Hope

- Advertisement -

அந்த அணிக்கு 65 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடியில் கெய்ல் மேயர்ஸ் 39 (23) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சமர் ப்ரூக்ஸ் தனது பங்கிற்கு 35 (36) ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய பிரண்டன் கிங் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் இந்த முக்கியமான போட்டியில் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் மறுபுறம் நங்கூரமகவும் சிறப்பாகவும் பேட்டிங் செய்து கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ஷாய் ஹோப் உடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்தி 1 பவுண்டரி 6 சிக்சருடன் 74 (77) ரன்களில் அவுட்டானார்.

அசத்திய ஹோப்:
அந்த சமயத்தில் களமிறங்கிய ரோவ்மன் போவல் 13 (10) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த ஷாய் ஹோப் 8 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (135) ரன்கள் விளாசி 49-வது ஓவரில் அவுட்டானார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 312 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 48 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடியில் கேப்டன் ஷிகர் தவான் 13 (31) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 43 (49) ரன்களில் அவுட்டானார்.

Axar Patel IND vs WI

அந்த சமயத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 9 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் – சஞ்சு சாம்சன் ஆகியோர் 4-ஆவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிய விடாமல் தூக்கி நிறுத்தினர். அதில் 63 (71) ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் தனது முதல் அரை சதத்தை அடித்த சஞ்சு சாம்சன் 54 (51) ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

போராட்டம் வீண்:
அந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய தீபக் ஹூடா 33 (36) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த ஷார்துல் தாக்கூர் 3 (6) ரன்களிலும் ஆவேஷ் கான் 10 (12) ரன்களிலும் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் 74 பந்துகளில் 114 ரன்கள் தேவை என்ற நிலைமையிலிருந்து கடைசி வரை அவுட்டாகாமல் அற்புதமாக பேட்டிங் செய்த அக்சர் படேல் பட்டியல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (35) ரன்களை 182.86 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார்.

Shai-Hope

அதனால் 49.4 ஓவரில் 312/8 ரன்களை எடுத்த இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றி பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மறுபுறம் வாழ்வா – சாவா போட்டியில் தனது அணியின் வெற்றிக்காக 115 ரன்கள் குவித்து போராடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் போராட்டம் வீணானது.

- Advertisement -

1. இருப்பினும் தன்னுடைய 100-வது ஒருநாள் போட்டியில் நேற்று களமிறங்கி சதமடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய 100-வது போட்டியில் சதமடித்த 10-வது வீரர் மற்றும் 4-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற என்ற பெருமையை பெற்றார்.

Shai Hope

2. அதைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கு பின் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பிரையன் லாரா, ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்களை முந்தி புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷாய் ஹோப் : 4193*
2. கோர்டன் க்ரீனிட்ஜ் : 4177
3. விவ் ரிச்சர்ட்ஸ் : 4146
4. பிரையன் லாரா : 3994

- Advertisement -

3. அதைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தது 10 போட்டிகளில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே பேட்ஸ்மேனாகவும் அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷாய் ஹோப் : 50.10*
2. ஜான் கேம்பல் : 49.91
3. டேனியல் : 49.00
4. விவ் ரிச்சர்ட்ஸ் : 47.00

Hope

4. அத்துடன் 2019க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பாபர் அசாம் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல்:
1. ஷாய் ஹோப்/பாபர் அசாம் : 12*
2. ரோஹித் சர்மா : 8

5. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2019க்குப்பின் அதிக அரை சதங்கள் அடித்த பேட்மேனாகவும் முதலிடத்தில் உள்ளார். அந்த பட்டியல்:
1. ஷாய் ஹோப் : 22*
2. விராட் கோலி : 21
3. பாபர் அசாம் : 19

இதையும் படிங்க: IND vs WI : அட்டகமாக ஆடிய அக்சர் படேல் – இந்தியாவுக்கு வெற்றியை பரிசளித்து கபில் தேவுக்கு பின் தோனியை முந்தி அபார சாதனை

கடந்த 2016இல் அறிமுகமாகி இப்படி சத்தமின்றி இத்தனை சாதனைகளை படைத்து வரும் இவரைப் பார்க்கும் ரசிகர்கள் சமீபகால வெஸ்ட் இண்டீஸ் அணியில் இப்படி ஒரு திறமையா என்று மனதார பாராட்டுகிறார்கள்.

Advertisement