ஷாருக்கான் கடைசி பால் சிக்ஸ். சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற தமிழக அணி – வைரலாகும் வீடியோ

Shahrukh
- Advertisement -

இந்தியாவில் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் டொமஸ்டிக் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் பல்வேறு மாநில அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதிப் போட்டிக்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் தகுதி பெற்றன. கடந்த 4ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது இன்று இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை குவித்தது. கர்நாடக அணி சார்பாக அபிநவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் எடுத்தனர்.

தமிழக அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதனை அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தமிழக அணியானது ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும், மிடில் ஆர்டரில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக சரிவை சந்தித்தது.

- Advertisement -

கடைசி 3 ஓவர்களில் கிட்டத்தட்ட 30 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலைலில் இருந்து இறுதியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட சாய் கிஷோர் பவுண்டரி அடித்தார். அடுத்த 4 பந்துகளில் 7 ரன்கள் கிடைத்தது. இதன் காரணமாக இறுதியில் ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அந்த கடைசி பந்தை எதிர்கொண்ட தமிழக வீரரான ஷாருக்கான் அசத்தலான சிக்ஸர் ஒன்றினை விளாச தமிழக அணி த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது மட்டுமின்றி சையத் முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மிகபெரிய சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக்கான் 15 பந்துகளில் 33 ரன்களை குவித்து அசத்தினார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். அவர் அடித்த இந்த கடைசி பந்து சிக்சர் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement