டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மிகபெரிய சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மட்டுமின்றி இந்த தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக டிராவிடும் பங்கேற்ற இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

axar

- Advertisement -

இந்த போட்டியில் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் அடித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். துவக்கம் முதலே அதிரடி காண்பித்த ரோகித் சர்மா 31 பந்துகளை சந்தித்த ரோஹித் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 56 ரன்கள் குவித்து அசத்தினார்.

நேற்று அடித்த அரைசதத்தோடு சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 26 ஆவது அரை சதத்தை அடித்து ரோஹித் அசத்தினார். அதுமட்டுமின்றி ஏற்கனவே 4 சதம் அடித்ததன் மூலம் விராட்கோலியின் மிகப்பெரிய டி20 சாதனையை அவர் நேற்று முறியடித்துள்ளார்.

Rohith

அந்த வகையில் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ பிளஸ் ஸ்கோர் அடித்த வீரராக விராத் கோலி திகழ்ந்து வந்தார். இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 29 முறை 50+ ரன்களை குவித்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. அதே வேளையில் ரோகித் நேற்றைய போட்டியில் அடித்த அரைசதத்தின் மூலம் 26 அரைசதம் மற்றும் 4 சதத்தின் மூலம் 30 முறை 50 + ரன்களுக்கு மேல் கடந்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்ஷல் படேலின் அட்டகாசமான பேட்டிங்கிற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா ? – சுவாரசிய தகவல் இதோ

இந்த பட்டியலில் முதலிடத்தில் தற்போது ரோஹித் சர்மாவும், இரண்டாவது இடத்தில் விராட் கோலியும், பாபர் அசாம் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் தொடரிலேயே அபாரமான வெற்றி பெற்றதால் நிச்சயம் டிராவிட் மற்றும் ரோஹித் கூட்டணி மேலும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement