IND vs PAK : சூப்பர் 4 ஆட்டத்திற்கு முன்னதாக மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக விலகல் – வெளியான தகவல்

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15-வது ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் அணிகளை தவிர்த்து மற்ற நான்கு அணிகளும் “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

இந்நிலையில் இன்று துபாய் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான “சூப்பர் 4” சுற்று போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்ட போது இந்திய அணியிலும் சரி, பாகிஸ்தான் அணியிலும் சரி நட்சத்திர வீரர்கள் சிலர் காயம் காரணமாக வெளியேறி இருந்தனர்.

இந்நிலையில் இந்த “சூப்பர் 4” ஆட்டத்திற்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யானது அறிவித்திருந்தது. இந்நிலையில் மேலும் பாகிஸ்தான அணிக்கு ஒரு பின்னடைவை தரும் விடயமாக தற்போது அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Shahnawaz Dahani

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது அந்த அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அப்ரிடி காயம் காரணமாக இடம்பெறவில்லை என்று அவர்கள் அறிவித்திருந்தனர். அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்றிருந்த ஷாநவாஸ் தஹானியும் கடைசியாக நடைபெற்று முடிந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

- Advertisement -

கடைசியாக அவர் விளையாடிய போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவரது காயத்தின் தன்மை குறித்த அறிக்கை 48 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியாகும் என்பதனால் இந்திய அணிக்கு எதிராக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. 24 வயதான ஷாநவாஸ் தஹானி பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையிலும் ஜடேஜா விளையாடமாட்டார். பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு – காரணம் என்ன?

மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் இன்றைய போட்டியில் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகம்மது ஹஸ்னைன் ஆகிய இருவரில் ஒருவருக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement