பாகிஸ்தான் கிரிக்கெட் இப்படி சீரழிந்து நிற்க காரணமே இதுதான் – ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு

Afridi
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மூலம் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியை கூட பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேச அணிகளுடன் இடம் பிடித்த பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

பாகிஸ்தான் சிக்கலில் சிக்க காரணமே அவங்கதான் : ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அணியன் இந்த தொடர் தோல்விகள் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதோடு இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலர் மத்தியிலும் விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும் பாகிஸ்தான அணி இப்படி மோசமான தோல்விகளை சந்தித்ததால் அந்த அணியில் இருந்து நட்சத்திர வீரர்களை நீக்கிவிட்டு முற்றிலும் இளம் வீரர்களை கொண்டுவர வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்தன.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி : பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான நிலைக்கு தேர்வுக்குழுவினர்தான் காரணம் என்றும் அவர்கள்தான் பாகிஸ்தான் அணி இப்படி மோசமான நிலையை சந்தித்து வருவதாகவும் காட்டுமான குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வுக்குழு தலைவர் மொக்சின் நக்வியை சந்தித்தேன் அவர் மைதானத்தை மேம்படுத்துவதில் முயற்சிகளை செய்துள்ளார். அது அவரது செயல்களில் நன்றாக தெரிந்தது. ஆனால் அவர் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என என்னிடமே கூறினார். இப்படி கிரிக்கெட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு தேர்வுக்குழு தலைவரையும், கிரிக்கெட்டை பற்றி எந்த ஒரு அனுபவமும் இல்லாத தேர்வுக் குழுவினரையும் வைத்துக்கொண்டு எப்படி ஒரு நல்ல அணியை தேர்வு செய்ய முடியும்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை தேர்வுக்குழுவில் துவங்கி வாரிய இயக்குனர்கள் வரை யாருக்குமே கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு புரியவில்லை. இப்படி கிரிக்கெட்டை பற்றி தெரியாத ஒரு நிர்வாகத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்று கூறுவது அபத்தமானது.

இதையும் படிங்க : ராகுல் டிராவிட் பண்ணதை நீங்களும் பண்ணுங்க.. ரோஹித் கோலிக்கு அட்வைஸ் கூறிய – ஆகாஷ் சோப்ரா

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் சரியாக இருந்தால் பாகிஸ்தான் அணியும் முன்னேற்றம் அடையும் என ஷாஹித் அப்ரிடி பகிரங்கமான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது போன்று பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் பாகிஸ்தான் அணியின் நிர்வாகத்தில் முன்னாள் வீரர்களின் தலயீடு இருந்து அவர்களும் பங்களித்தால் தான் பாகிஸ்தான் அணியை கரை சேர்க்க முடியும் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement