பாண்டிங், தோனி இருவரில் இவரே சிறந்த கேப்டன் – ஷாஹித் அப்ரிடி தேர்வு செய்தது யாரை தெரியுமா ?

Ponting-1

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டனாக திகழ்ந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்காக பாண்டிங் 2001 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத அணியாக தனது அணியை முன் நின்று கொண்டு சென்றார்.

ponting

மேலும் 2003 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் பாண்டிங் அதேபோன்று இந்திய அணிக்கு 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ்கோப்பை நடந்த அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனி.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இடம் அதற்கு பதிலளித்த சாகித் அப்ரிடி…

Dhoni

என்னை பொறுத்தவரை தோனி தான் மிகச் சிறந்த கேப்டன் ஏனெனில் அவர் ஒரு புதிய இளம் வீரர்களை வைத்து அணியை உருவாக்கினார். அவர்களை வைத்தும் கோப்பைகளை வென்றுள்ளார் இதனால் தோனிதான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார் சாகித் அப்ரிடி.

- Advertisement -

Dhoni

இவர் சொல்வது உண்மைதான் ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்றவர்களெல்லாம் வளர்த்தது தோனிதான் என்றால் அது மிகையல்ல.