இந்திய ரசிகர்கள் மாதிரி மோசமானவங்கள பாக்கவே முடியாது, 2005 நிகழ்வை சுட்டி காட்டிய ஷாஹித் அப்ரிடி – காரணம் என்ன?

Shahid Afridi
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா தற்போது வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்கள் மண்ணில் நடத்து உள்ளது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வலுவான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கு நிகராக வரும் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வென்று காலம் காலமாக வைத்துள்ள கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கிறது.

- Advertisement -

சாடிய அப்ரிடி:
ஏனெனில் 1992 முதல் இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. ஆனால் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது. அதனால் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் எஞ்சிய ஆசிய கோப்பை போட்டிகளை இலங்கையிலும் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் திட்டமிட்டு அட்டவணைகளையும் வெளியிட்டுள்ளது.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை தங்களுக்கு பாதுகாப்பில்லாத அகமதாபாத் நகரிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்ற வேண்டும் என விமர்சித்து வருகிறது. போதாக்குறைக்கு அந்நாட்டின் புதிய வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஜாகா அஸ்ரப் பாகிஸ்தான் நடத்தும் உலகக்கோப்பை போட்டிகளை ஏன் பொதுவான இடத்தில் நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பி வருகிறார். அதன் காரணமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா என்பது இன்னும் 100% உறுதியாகாமலேயே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த சச்சரவுகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு பயணித்து உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்று நட்சத்திரம் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி அந்நாட்டு வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளார். அதை விட கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்ற பின் மைதானத்தை விட்டு கிளம்பிய போது தங்களுடைய பேருந்தை இந்திய ரசிகர்கள் கல்லால் அடித்ததாகவும் அவர் சமயம் பார்த்து விமர்சித்துள்ளார்.

மேலும் தாங்கள் பவுண்டரி, சிக்ஸர் அடித்தால் அதற்காக கை கூட தட்டுவதற்கு மனமில்லாத மோசமான இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயமாக விளையாட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது எந்த விதமான அச்சுறுத்தல்களும் சவால்களும் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை புறக்கணிக்க நினைக்கும் இந்தியாவுக்கு அவர்களின் சொந்த மண்ணில் கோப்பையை வென்று பதிலடி கொடுக்க வேண்டுமென அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நாங்கள் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் அடித்தும் எங்களுக்கு யாருமே கைத்தட்டவில்லை. அதை விட பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நாங்கள் வென்ற போது எங்களுடைய பேருந்து மீது கல் வீச்சு நடத்தப்பட்டதை அப்துல் ரசாக்கிற்கு நினைவிருக்கும். எனவே எப்போதுமே அழுத்தம் என்பது அங்கே காத்திருக்கும்”

இதையும் படிங்க:அப்டினா தல தோனிக்கு அப்றம் அவர் தான் கேப்டன்ன்னு சொல்லுங்க, உறுதியான முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் – காரணம் இதோ

“அதற்கு பயப்படாமல் நீங்கள் அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். அனைவரும் இந்தியாவுக்கு உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் செல்லக்கூடாது என கூறுகிறார்கள். நான் அதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறேன். மேலும் நாம் அங்கே சென்று வென்று காட்ட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement