யார் பேச்சையும் கேக்காத. நீ மாட்டும் ஆடு எந்த குறையும் இல்ல – இளம்வீரருக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை

Afridi
- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் சமீப காலமாகவே பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் கேப்டனான பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாமல் தவித்து வருகிறார். பாகிஸ்தான் அணி தற்போது டி20 கிரிக்கெட்டில் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரது ஜோடி கொடுக்கும் சிறப்பான துவக்கம் தான். டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான துவக்கம் அளிக்கும் இவர்கள் இருவரும் விரைவில் ஆட்டம் இழந்து விட்டால் பாகிஸ்தான் அணி பெரிய சறுக்கலை சந்தித்து வருகிறது.

rizwan

- Advertisement -

அந்த வகையில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் முகமது ரிஸ்வான் ரன்களை குவித்து வந்தாலும் அவரது துவக்கத்தை மற்ற வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் போகிறார்கள். அதோடு விக்கெட்டுகள் இடையில் விழும் போது அவர் சற்று பொறுமையாக விளையாடுவதால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் அதிக அளவு பேசப்படும் விடயமாக மாறி உள்ளது.

இப்படி பலரும் முகமது ரிஸ்வானின் ஸ்டிரைக் ரேட் குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாகித் அப்ரிடி அவருக்கு ஒரு முக்கியமான அட்வைஸ் ஒன்றினை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நீங்கள் பந்துவீச்சில் அல்லது பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம்.

rizwan 2

அந்த வகையில் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவருமே பாகிஸ்தான் அணிக்கு நல்ல துவக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து மட்டுமே ஒரு அணியை உருவாக்க முடியாது. 11 வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். பாகிஸ்தான் அணியில் 6 பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதில் குறைந்தபட்சம் மூன்று பேராவது மிக சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும்.

- Advertisement -

தற்போது ரிஸ்வான் விளையாடும் விதம் குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை ஒரே விஷயத்தை தான் அவரிடம் தெளிவாக கூற விரும்புகிறேன். நீங்கள் (ரிஸ்வான்) எந்த ஒரு திட்டத்தையும் மாற்ற தேவையில்லை. நீங்கள் யார் பேச்சையும் கேட்க வேண்டாம். உங்களது வழக்கமான கிரிக்கெட்டை விளையாடுங்கள் நிச்சயம் உங்களால் ஜொலிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் நல்லாதான் ஆடுறாரு. ஆனாலும் அவர்கிட்ட பெரிய மைனஸ் இருக்கு – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

இந்த நடப்பு ஆண்டில் மட்டும் 14 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள ரிஸ்வான் அதில் 8 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலிலும் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement