அப்ரிடிக்கு கொரோனா பாதித்தது எவ்வாறு தெரியுமா ? அவரே வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

Afridi
- Advertisement -

உலக அளவில் கோரோணா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,52,944 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 4,28,525 ஆக உள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனவைரஸ் பாகிஸ்தானிலும் பரவி உள்ளது. அந்த வகையில் 1,32,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

afridi

- Advertisement -

மேலும் 2559 பேர் கோரோணாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6472 ஆக உள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் 88 பேர் இறந்துள்ளனர். உலகின் பல பிரபலம் பலருக்கும் கரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
இங்கிலாந்தின் பிரதம அமைச்சர், இத்தாலியின் மேயர்கள், ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் என பலருக்கும் இந்த பரவியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான சாகித் அப்ரிடி கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சாகித் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக 1996ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். தற்போது 27 டெஸ்ட் போட்டிகளிலும், 398 ஒருநாள் போட்டியிலும், 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக கிட்டத்தட்ட சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் .

Afridi

இவருக்கு கடந்த 10 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கோரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இன்று அவருக்கு கோரோணா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பாகிஸ்தானில் ஏற்கனவே கொரோனா தொற்று அபாய கட்டத்தை தாண்டி சென்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டத்தில்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய பிரபலமாக இருக்கும் அப்ரிடிக்கும் வந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் தங்களது உயிரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கரோனா வைரஸ் இருப்பதை அறிவித்துள்ள சாகித் அப்ரிடி தனக்காக பிராத்தனைகளை மேற்கொள்ளுமாறு சக வீரர்களிடமும் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement