- Advertisement -
உலக கிரிக்கெட்

5 ஆவது பெண் குழந்தைக்கு தந்தையான அப்ரிடி. பெயர் வைக்க ரசிகர்களிடம் விமரிசையான வேண்டுகோள் – விவரம் இதோ

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அஃப்ரிடி 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு அடி எடுத்து வைத்து 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தவர். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர் (351) அடித்த வீரர் என்ற பெருமை படைத்தவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் தற்போது 20 ஓவர் மற்றும் 10 ஓவர் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். 39 வயதான இவருக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இது அவர்களுடைய ஐந்தாவது பெண் குழந்தையாகும். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அப்ரிடி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். மேலும் கடவுளின் எல்லையில்லா ஆசீர்வாதங்களும் கருணையாலும் எனக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கு பெயர் வைப்பதற்காக உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று ரசிகர்களுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே எனது மகள்களின் பெயர்கள் அக்சா, அன்ஷா, அஜ்வா, அஸ்மரா இந்த வரிசையில் எனது ஐந்தாவது மகளுக்கும் ஏ வரிசையில் பெயரை வைக்க நான் விரும்புகிறேன். எனவே பொருத்தமான பெயரை தேர்வு செய்து நீங்களே சொல்லுங்கள் என்று ரசிகர்களும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by