பாகிஸ்தான் அணியை சேர்ந்த 21 வயது வீரரை மருமகனாக்கிய ஷாஹித் அப்ரிடி – அவரே வெளியிட்ட தகவல்

Afridi

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரரும் கேப்டனுமான 44 வயதான ஷாகித் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக 1996ஆம் ஆண்டு அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 23 வருடங்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடிய அவர் அதன் பின்னர் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவரது மகள் அக்ஷா அப்ரிடி 21 வயது பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்ய உள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

Afridi 2

44 வயதான ஷாகித் அப்ரிடிக்கு மொத்தம் ஐந்து மகள்கள் (அக்ஷா அப்ரிடி, அன்ஷா அப்ரிடி, அஜ்வா அப்ரிடி, அஸ்மரா அப்ரிடி, அர்வா அப்ரிடி) இருக்கின்றனர். இதில் மூத்த மகளான அக்ஷா அப்ரிடியை அவர் பாகிஸ்தான் அணியை சேர்ந்த 21 வயது வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷாவிற்கு திருமணம் செய்ய உள்ளதாக தற்போது உறுதிபடுத்தி உள்ளார்.

- Advertisement -

தனது மகளின் திருமணம் குறித்து ட்விட்டர் பதிவில் கருத்து ஒன்றினை வெளியிட்டு உள்ள அப்ரிடி அதில் குறிப்பிட்டதாவது : ஷாஹீன் ஷா எனது வருங்கால மருமகனாக இருக்கிறார். தற்போது என் மகள் படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் டாக்டருக்கு படிக்க விரும்புவதால் மீதமுள்ள படிப்பை பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்தில் பயில உள்ளார்.

அவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெறும் வரை எங்கள் இரு குடும்பத்திற்கும் தொடர்பு கிடையாது. ஷாஹீன் ஷாவின் குடும்பத்தினர் என்னுடைய குடும்பத்தினரை அணுகி இந்த திருமணம் குறித்து பேசினர். இரண்டு குடும்பத்திற்கும் சம்மதம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்ய வேண்டும் அல்லாஹ் விரும்பினால் அது நன்றாக நடக்கும்.

- Advertisement -

shaheen

ஷாஹீன் ஷா தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டிலும், வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது இந்த திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்ஷாவின் மேற்படிப்பு காரணமாக இன்னும் இரண்டு ஆண்டுகலுக்குள் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.

Advertisement