டி20 உ.கோ’யில் இந்தியாவை சம்பவம் செய்வதற்கு தயாராகிட்டாரு – நட்சத்திர பவுலரின் காயம் குறித்து பாக் வாரியம் மகிழ்ச்சி

Shaheen-afridi-1
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. டி20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் மோதுகின்றன. அந்த வகையில் இந்த தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் பரம எதிரிகள் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் எல்லைப் பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து இதுபோன்ற உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே மோதுகின்றன.

shaheen afridi 1

- Advertisement -

அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு முன்பைவிட மவுசு அதிகமாகியுள்ள நிலையில் கடந்த முறை துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவைத் தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது. அதற்கு ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய இளம் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் காயத்தால் பங்கேற்கவில்லை. இருப்பினும் ஆசிய கோப்பை லீக் சுற்றில் தங்களை தோற்கடித்த இந்தியாவை மீண்டும் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்து பழி வாங்கிய பாகிஸ்தான் பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

சம்பவம் இருக்கு:
அதனால் எஞ்சியிருக்கும் அந்த பழைய கணக்கை இம்முறை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் பதிலடி கொடுத்து பழிவாங்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா போராட உள்ளது. முன்னதாக ஆசிய கோப்பையில் காயத்தால் பங்கேற்காத சாஹீன் அப்ரிடி தற்போது அதிலிருந்து குணமடைந்து வருவதால் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் அவர் வலைப்பயிற்சிகளை துவங்காமல் இருப்பது அந்நாட்டு ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

Shaheen-Afridi

இந்நிலையில் காயத்துக்கு பின் முதல் முறையாக உலக கோப்பை பயிற்சி போட்டிகளில் சாஹீன் அப்ரிடி களமிறங்குவார் என்று தெரிவிக்கும் பாகிஸ்தான் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா டி20 உலக கோப்பையில் அவர் முழுமையாக விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் எப்படி இருந்தாலும் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தாம் நிச்சயம் விளையாடுவேன் என்று ஷாஹீன் அப்ரிடி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“2 நாட்களுக்கு முன்பாக சாஹீன் அப்ரிடியிடம் நான் பேசினேன். அவர் சிறப்பாக குணமடைந்து வருகிறார், அந்த வீடியோவை டாக்டர்கள் எனக்கு அனுப்பினர். தற்போது 90% குணமடைந்த அவர் உலக கோப்பையில் விளையாடுவார் என்று நினைக்கிறேன். முழங்கால் காயங்கள மிகவும் ஆபத்தானது என்பதால் அவர் 110% குணமடையும் வரை நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனாலும் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து அங்கு நடைபெறும் பயிற்சி போட்டிகளில் விளையாடி நிச்சயமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவேன் என்று அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார்”

Ramiz-Raja

“அதே போல் பக்கார் ஜமானும் தன்னுடைய காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அவரும் குணமடையும் பட்சத்தில் அணிக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்துவார். இருப்பினும் அவரது விஷயத்தில் இறுதி முடிவு அணி நிர்வாகம் எடுக்க உள்ளது. மேலும் உஸ்மான் காதர் தன்னுடைய கைவிரலில் காயத்தை சந்தித்துள்ளதால் அவருக்கான மாற்று வீரரை நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது” என்று கூறினார். அதாவது தற்போது கிட்டத்தட்ட காயத்திலிருந்து குணமடைந்துள்ள அஃப்ரிடி பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி தோற்கடிக்க வேண்டும் என்பதில் தங்களை விட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.

அதனால் ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக லீக் சுற்றில் ஏற்பட்ட தடுமாற்ற தோல்வியும் இந்த உலகக் கோப்பையில் ஏற்படாது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்படி பாகிஸ்தானின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் குணமடைந்துள்ள நிலையில் இந்தியாவின் தரப்பில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியுள்ளது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement