பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது சமீப காலமாகவே தங்களது மோசமான ஆட்டத்தால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களே அவர்களது அணியை குறை கூறும் அளவிற்கு அவர்கள் சமீப காலத்தில் படுதோல்விகளை சந்தித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போது அமெரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் தற்போது வங்கதேச அணியிடமும் தோல்வியை சந்தித்துள்ளது.
கேப்டனுக்கு இதுதான் மரியாதையா? :
அந்த வகையில் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் பாகிஸ்தான் அணியானது நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வங்கதேச அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இதுவரை வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இருந்த பாகிஸ்தான் அணி இம்முறை சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்திருப்பது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதல் இன்னிங்சில் 448 ரன்கள் 448 ரன்கள் குவித்தும் வங்கதேச வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.
அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அந்த அணி பின்னர் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தனர். இப்படி ஒருபுறம் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துக்கொண்டிருக்க காரணம் அந்த அணியில் ஒற்றுமை இல்லாது தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு கேப்டன் மாற்றங்கள் அந்த அணியில் நிகழ்ந்திருந்த வேளையிலும் வீரர்கள் ஒற்றுமையாக இல்லை என்கிற தகவல் பலராலும் பேசப்பட்டு வந்தது.
அந்த விடயத்தை உறுதி செய்யும் விதமாக தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நடைபெற்ற ஒரு விடயம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடியின் தோள் மீது அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் கை போட்டு பேசிக்கொண்டிருந்த வேளையில் அவரது கையை தட்டி விட்டு உதாசீனப்படுத்தி ஷாஹீன் அப்ரிடி செய்த செயல் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : தோனி ஒரு டைப்னா.. விராட் கோலி அப்படியே வேற டைப்.. இருவரது கேப்டன்சி ஸ்டைல் குறித்து – சஞ்சய் பாங்கர் பேச்சு
ஒரு அணியின் கேப்டன் வீரர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரின் கையை எப்படி தட்டி விடலாம்? என்றும் அப்புறம் அவருக்கு என்ன மரியாதை என்பது போன்று விமர்சகர்கள் ஷாஹீன் அப்ரிடி செய்த இந்த செயல் மீது கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



