மீட்டரில் ஆஸ்திரேலியா எங்கள ஏமாத்துனா.. நான் ஒன்னும் செய்ய முடியாது.. ஷாஹீன் அப்ரிடி பதிலடி

Shaheen Afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் படுதோல்வியை சந்தித்தது. அதனால் 1995க்குப்பின் தொடர்ந்து 28வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றியை காண முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களிடம் ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி சுமாராக பந்து வீசியது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சொல்லப்போனால் புதிய பந்தை ஸ்விங் செய்து 145 கி.மீ வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய அவர் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

வேடிக்கையான பதில்:
குறிப்பாக அதிரடியான வேகத்தில் பந்துகளை ஸ்விங் செய்வது அவருடைய பலமாக இருந்தது. ஆனால் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையிலிருந்தே அவருடைய சராசரி வேகம் 140 கிலோ மீட்டருக்கு கீழே வந்துள்ளது. அதன் உச்சமாக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் சாகின் அப்ரிடி 132 முதல் 133 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வீசியதாக அந்நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

அதனால் தற்போதைக்கு இடைவெளி எடுத்து விரைவில் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசும் அளவுக்கு பழைய ஃபார்முக்கு திரும்புவதற்கான வழியை பாருங்கள் என அவருக்கு முன்னாள் ஜாம்பவான் வீரர் வகார் யூனிஸ் ஆலோசனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீப காலங்களாக உங்களுடைய வேகம் ஏன் குறைந்து விட்டது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

அதற்கு அவர் கூறிய வேடிக்கையான காரணம் பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் பந்து வீசிய பின் எங்களுடைய வேகத்தை நாங்களும் பெரிய திரையில் பார்த்தோம். நாங்கள் அவ்வளவு மெதுவாகவா வீசுகிறோம்? அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பம் முதலே நாங்கள் முழுமையான ஒரே மாதிரியான உழைப்பை போட்டே பந்து வீசுகிறோம். ஆனாலும் வேகம் 132 – 133 என்ற அளவில் மட்டுமே இருக்கிறது”

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் ராகுல் கிடையாது.. இளம் வீரரை இறக்கும் பிசிசிஐ

“எனவே அது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை நாங்கள் வீசும் பந்துகள் இந்தளவுக்கு மேல் செல்லக்கூடாது என்று தொலைக்காட்சி நிர்வாகங்கள் எதையும் முடிவு செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை” என்று கூறினார். அதாவது தாம் முழுமையான வேகத்தில் வீசினாலும் அதை ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனங்கள் வேண்டுமென்றே ஸ்பீடோ மீட்டரில் குறைத்து காண்பிப்பதாக ஷாஹீன் அப்ரிடி கூறியுள்ளார். அவருடைய இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement