ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் தங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று வங்கதேச கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அத்துடன் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஐசிசிக்கு வங்கதேச வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் இயற்கை எய்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் முக்கியமான அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிசூர் ரஹ்மான் விளையாடக்கூடாது என்ற எதிர்ப்புகளும் எழுந்தன. எனவே முன்னெச்சரிக்கையாக ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நிர்வாகத்தை பிசிசிஐ கேட்டுக் கொண்டது.
இந்தியாவுக்கு இதே வேலையா போச்சு:
அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட கொல்கத்தா நிர்வாகம் 9.20 கோடிக்கு வாங்கிய ரஹ்மானை அணியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தது வங்கதேச ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. அதனுடைய எதிரொலியாகவே இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்புவதற்கும் தடை விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கதேச போட்டிகளை திடீரென இலங்கைக்கு மாற்றுவதில் சிக்கல் இருப்பதாக ஐசிசி கருதுகிறது.
எனவே ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது விளையாடாமல் வெளியேறினால் எதிரணியிடம் புள்ளிகளை இழக்கத் தயாராகுங்கள் என்று ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி வங்கதேசத்திற்கு பதிலளித்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு விதிமுறைகளையும் உணர்வுகளையும் உடைப்பது இந்தியாவுக்கு வேலையாயிற்று என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார். அதற்கு 2026 டி20 உலகக் கோப்பையில் களத்தில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு தோல்வியை பதிலடி பரிசாகக் கொடுப்போம் என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.
அஃப்ரிடி பதிலடி:
இது பற்றி அஃப்ரிடி பேசியது பின்வருமாறு. “எல்லையைச் சுற்றியிருக்கும் மக்கள் விளையாட்டு உணர்வை மீறியுள்ளார்கள். இருப்பினும் கிரிக்கெட்டில் விளையாடுவதை எங்களுடைய வேலை. அதுவே எங்களுடைய கவனமாக இருக்கும். இவை அனைத்துக்கும் நாங்கள் களத்தில் பதிலடி கொடுக்க முயற்சி செய்வோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய மண்ணில் அந்த 2 சூப்பர் ஸ்டாருக்கு எதிராக பந்துவீசுவது ரொம்ப கஷ்டம் – கைல் ஜெமிசன் பேட்டி
கடந்த வருடம் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடியாக 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் கைகுலுக்காத இந்திய அணி வெற்றிக்குப் பின் பாகிஸ்தான் தலைவர் கைகளால் கோப்பையை வாங்க மறுத்து விட்டது. அன்று தங்களை அவமானப்படுத்திய இந்தியா இன்று வங்கதேசத்திற்கும் பிரச்சனை கொடுப்பதாக சாஹின் அப்ரிடி தெரிவித்துள்ளார். எனவே வங்கதேசத்துடன் சேர்ந்து தாங்களும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று அவர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



