சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி வடோதராவில் துவங்க உள்ளது.
அந்த 2 பேருக்கு எதிராக பந்துவீசுவது கடினம் : கைல் ஜேமிசன்
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து தற்போது வடோதரா சென்றடைந்துள்ள இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் நியூசிலாந்து அணி வீரர்களும் ஏற்கனவே இந்தியா வந்தடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் அளித்துள்ள ஒரு பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தவகையில் பேசிய கைல் ஜேமிசன் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு எதிராக பந்து வீசுவது கடினம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : எப்பொழுதுமே இந்திய மண்ணில் இந்திய அணியை எதிர்த்து விளையாடுவது என்பது ஒரு சவாலான விடயம்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு எதிராக பந்து வீசுவது மிகப்பெரிய சவால். அந்த சவாலை எதிர்நோக்கி செயல்பட நான் காத்திருக்கிறேன். இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும் போது நிச்சயம் வலிமையான அணியாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க : 25/5 டூ 249/7.. 15 சதம்.. தனியாளாக தூக்கிய ருதுராஜ் வரலாற்று சாதனை சமன்.. தேர்வுக்குழுவுக்கு பதிலடி
அவர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில் விளையாட நாங்கள் தயாராகி வருகிறோம். அதேபோன்று டி20 உலக கோப்பை தொடரும் இங்கே நடைபெற உள்ளதால் இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு மிக முக்கியமான சுற்றுப்பயணமாக மாறியுள்ளது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.



