- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஃபைனல் முழுசா பாத்தேன்.. தகுதியான இந்தியா ஜெய்க்க இதான் காரணம்.. நாங்களும் மாறனும்.. ஷாஹீன் அப்ரிடி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் வரலாற்றிலேயே உச்சகட்டமாக 20 அணிகள் விளையாடின. ஆனால் அந்த அனைத்து அணிகளையும் விட சிறப்பாக விளையாடிய இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் உடைத்துள்ளது. அந்த வெற்றி 140 கோடி இந்திய மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. அந்த வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர்.

- Advertisement -

தகுதியான இந்தியா:
இந்நிலையில் பார்படாஸ் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய இறுதிப் போட்டியை தாம் முழுவதுமாக பார்த்ததாக பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார். அப்போட்டியில் நிலவிய உச்சகட்ட அழுத்தத்தை சமாளித்து அதிரடியான கிரிக்கெட்டை விளையாடிய இந்தியா வெற்றிக்கு தகுதியான அணியாக செயல்பட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அதே போல தாங்களும் பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் அந்தப் போட்டியை பார்த்து மகிழ்ந்தேன். 2 அணிகளும் நன்றாக விளையாடின. பொதுவாக அது போன்ற போட்டிகளில் போட்டி நாளன்று யார் அழுத்தத்தை கையால்கிறார்களோ அவர்கள் வெல்வார்கள். அந்த வகையில் இந்தியா நல்ல பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டை விளையாடியது. அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். உலகக் கோப்பைகளில் வலுவான அணிகள் போட்டியிடும்”

- Advertisement -

“அங்கே அனைத்து அணிகளுமே குறிப்பிட்ட செயல்முறையை கடந்த பின்பே விளையாட வருவார்கள். எங்களுடைய அணியில் சில விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதை செய்து கடினமாக உழைத்தால் எங்களுக்கும் வெற்றிகரமான முடிவு கிடைக்கும்” என்று கூறினார். முன்னதாக இதே தொடரில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் விளையாடியது.

இதையும் படிங்க: 1992இல் 11 வயதில் ஆஸி அழ வெச்சாங்க.. அதனாலேயே இந்தியாவுக்கு 2011 உ.கோ வெல்ல முடிவெடுத்தேன்.. கம்பீர்

ஆனால் லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவிடம் வெறும் 119 ரன்களை அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி தற்சமயத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -