
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணி புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. முன்னதாக இறுதிப் போட்டியில் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போட்டியில் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது பாண்டியா வீசிய முதல் பந்திலேயே டேவிட் மில்லர் நேராக சிக்சர் அடித்தார்.
அதை லாங்க் ஆஃப் திசையிலிருந்து ஓடி வந்த சூரியகுமார் யாதவ் சரியாகப் பிடித்தார். இருப்பினும் பேலன்ஸை இழந்ததால் பந்தை களத்திற்குள் தூக்கிப் போட்டு விட்டு பவுண்டரிக்குள் சென்ற அவர் மீண்டும் வந்து கச்சிதமாக பிடித்தார். அதுவே கடைசியில் இந்தியாவின் சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றியதால் சூரியகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று பலரும் பாராட்டினர்.
ஏபிடி கருத்து:
ஆனால் அந்த கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக வேண்டுமென்றே யாரோ பவுண்டரியை சில அடிகள் பின்னோக்கி வைத்திருந்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சித்தனர். மேலும் சூரியகுமார் பவுண்டரிக்குள் செல்லம் போது அவருடைய கால் உரசியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் அதற்கு ஏற்கனவே தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் வீரர் ஷான் பொல்லாக் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சூரியகுமார் பிடித்த கேட்ச் நியாயமானது என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் 3வது அம்பயர் இன்னும் சில முறை சோதித்து பார்த்திருந்தால் இவ்வளவு சந்தேகம் இருந்திருக்காது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்தப் போட்டி முடிந்து விட்டது. எனவே கடந்த காலத்தில் என்ன நடந்தது? பவுண்டரியில் கால் உரசியதா? இல்லையா? என்பதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை”
“இருப்பினும் அந்த ரிப்ளைவை பார்க்கும் போது அதை நான் சமாதானப்படுத்திக் கொண்டே வெளியே நடந்தேன். ஏனெனில் போட்டி அங்கே முழுமையாக முடியவில்லை. ஆனால் அது முடிந்து போனது. அதிலிருந்து கற்றுக் கொள்வதை தவிர்த்து மீண்டும் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. அது நடுவரின் முடிவு. வேண்டுமானால் நடுவர் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து பல்வேறு கோணங்களில் அதை சோதித்துப் பார்த்திருக்கலாம்”
இதையும் படிங்க: பங்கமாக அசிங்கப்பட்ட இடத்திலேயே ஹீரோவாக மாஸ் கம்பேக் கொடுத்த ஹார்டிக் பாண்டியா – ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு
“இப்படி வேண்டுமானால் அதை கொஞ்சம் விமர்சிக்கலாம். மற்றபடி அந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டதாகவே நான் உணர்ந்தேன். ஏனெனில் நீங்கள் ஒரு ரிப்ளைவை பார்க்க 10 – 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. அதை பார்க்கும் போது நடுவர் சரியான முடிவை எடுத்துள்ளதாகவே எனக்குத் தெரிகிறது. எங்களுடைய வீரர்கள் சிறந்த முயற்சியை கொடுத்தனர். ஆனால் அதையும் தாண்டி மேலே வந்த இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.