- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சகாப்தம் முடிஞ்சுருக்கு.. அவர் மீண்டும் நிரூப்பிச்சுட்டாரு.. ஓய்வு பெற்ற விராட், ஜடேஜா, ரோஹித்தை வாழ்த்திய ஏபிடி

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அந்த தொடருடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். தற்போது 35 வயதை கடந்து விட்டதால் அந்த மூவரும் ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் ஆகியோர் விடை பெற்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அந்த மூவருக்கும் அந்த தென்னாபிரிக்க ஜாம்பவான் பிறர் ஏபி டீ விலியர்ஸ் மனதார பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மூவருக்கும் ஏபிடி பாராட்டு:
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது இந்திய வீரர்களின் சகாப்தம் முடிந்த தருணமாகும். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய ஓய்வை அறிவித்துள்ளனர். எனவே அவர்கள் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் இந்திய வண்ணத்தில் விளையாடுவதை பார்க்க முடியாது”

“அதே சமயம் வெளியேறுவதற்கு இதை விட சிறந்த வழியும் இருக்க முடியாது. ஏனெனில் உலகக் கோப்பையை வென்ற நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே அவர்களுடைய இந்த முடிவை நான் ஆதரிக்கிறேன். இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர்களை நான் மிஸ் செய்வேன். ஆனால் வருங்காலத்தில் உலகக் கோப்பையில் விளையாடும் ஈடுபாடு இல்லையென்றால் இளம் வீரர்களுக்கு வழி விட இதுவே சரியான நேரம்”

- Advertisement -

“இந்தியாவுக்காக கடந்த பல வருடங்களாக விராட் கோலி அற்புதமாக செயல்பட்டு வருகிறார். பெரிய தருணங்களில் அசத்தக்கூடிய அவர் மீண்டும் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் தன்னை நிரூபித்துள்ளார். அங்கே சிறப்பாக விளையாடிய அவர் இந்தியா 176 ரன்கள் குவிக்க உதவி வெற்றிக்கு அடித்தளமிட்டார். இந்த தொடரில் ரோஹித் சர்மா அபாரமாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: இனிமேல் பேசி பிரயோஜனம் இல்ல ஆனா அம்பயர் இதையாச்சும் செஞ்சுருக்கலாம்.. சூரியகுமார் கேட்ச் பற்றி ஏபிடி

“அதே எனர்ஜி, உணர்ச்சியுடன் அவர் நல்ல மனிதராக செயல்பட்டதை நான் விரும்பினேன். ரோபோட் இல்லாத அவரும் ஏமாற்றங்களை வெளிப்படுத்தினார். அவருக்காக வீரர்கள் ரியாக்ட் செய்தனர். ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டர். நிறைய கோப்பைகளை வென்றுள்ள அவர் எப்போதும் முக்கிய தருணத்தில் இருப்பார். களத்தில் நன்றாக செயல்படக்கூடிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடியதை நான் மகிழ்ச்சியுடன் பார்த்தேன்” என்று கூறினார்.

- Advertisement -