PAK vs AFG : 19 வயதில் உலகக்கோப்பை போட்டியில் உலகசாதனை படைத்த – பாகிஸ்தான் வீரர்

உலகக் கோப்பை தொடரின் 36 வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், சர்பிராஸ் அகமது தலைமை

Shaheen-Afridi
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 36 வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

pak vs afg

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான் அணி அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி குவித்தது. அதிகபட்சமாக அஸ்கர் ஆப்கான் 42 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பாக ஷாகின் அப்ரிடி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் ஷாகின் அப்ரிடி 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த வீரரான இவர் டீன்-ஏஜில் அதாவது மிகக் குறைந்த வயதில் உலகக் கோப்பை போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Shaheen

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement