இவர் என்மீது வைத்த நம்பிக்கையே எனது சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் – ஷாபாஸ் அகமது ஓபன்டாக்

Shahbaz-ahmed
- Advertisement -

தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்று இந்த ஐபிஎல் தொடரில் வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது கோலி தலைமையிலான பெங்களூர் அணி. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி. முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூர் அணி 150 ரன்களை இலக்காக ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்தது. ஆனால் 150 ரன்களையே டிஃபன்ட் செய்து மாஸ் காட்டியுள்ளது பெங்களூர் அணி. இந்த போட்டியில் கோலியின் துருப்புச் சீட்டான ஷபாஷ் அஹமத் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

shahbaz ahmed

- Advertisement -

எப்போதுமே வித்தியாசமான முடிவு எடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கோலி, இந்த முறையும் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸை அளித்தார். பின்ச் ஹிட்டரான ஷபாஷ் அஹமத்தை ஒன்டவுன் ஆர்டரில் பேட்டிங் ஆட வைத்தார். ஆனால் ஷபாஸ் அஹமத்தால் கோலியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால் பவுலிங்கில் முக்கியமான நேரத்தில் பந்துவீசி ஆட்டத்தின் போக்கையே மாற்றித் தந்தார் ஷபாஷ் அஹமத்.

24 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்தால் ஹைதராபாத் அணி வெற்றி பெறும் என்ற நிலையில் பந்து வீச வந்தார் ஷபாஷ் அஹமத். அந்த 17 ஆவது ஓவரில் ஐதராபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே மற்றும் அப்துல் சமத் ஆகிய மூவரின் விக்கெட்டுக்களையும் எடுத்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. மூவருமே ஷபாஷ் அஹமத்தின் ஸ்பின்னை சரியாக கணிக்கத் தெரியாமல் அவுட்டாகினர். பேட்டிங்கில் கோலியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அஹமத் பௌலிங்கில் கோலி எதிர்ப்பார்த்ததற்க்கும் மேலாகவே செய்துவிட்டார்.

Shahbaz 1

இந்தப் போட்டியில் பந்து வீசிய ஷபாஸ் அஹமத் இரண்டு ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பவுலிங்கில் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது பெங்களூர் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஷபாஷ் அஹமத். போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ஷபாஷ் அஹமத், இது போன்ற சூழ்நிலைகளில் 17வது ஓவர் வீசுவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் அணித்தலைவர் கோலி என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அந்த ஓவரை கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

Shahbaz 2

ஆடுகளத்தின் தன்மையும் என்னுடைய ஸ்பின் பௌலிங்கிற்கு ஏற்றவாறு ஒத்துழைத்தது. 19வது ஓவரை வீசவும் நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் முகம்மத் சிராஜ் மிகச் சிறந்த பௌலர் என்பதால் அந்த ஓவர் அவருக்கு வழங்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.

Advertisement