பளார் என்று அரைவிட்ட பங்களாதேஷ் வீரர். சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டிய நிர்வாகம் – விவரம் இதோ

Shahadad
- Advertisement -

பங்களாதேஷ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன் இவர் வங்கதேச அணிக்காக 51 ஒருநாள் போட்டிகள் 38 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது 33 வயதாகும் இவர் தேசிய அணியில் இடம் கிடைக்காமல் உள்ளூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

Shahadad 1

- Advertisement -

இந்நிலையில் பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி வரும் இவர் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் டாக்கா அணிக்காக விளையாடும் அவர் போட்டியின்போது தனது பந்துவீச்சை குறை சொல்லி தனது பந்து வீச்சு குறித்து விமர்சித்த அதே அணியைச் சேர்ந்த சக வீரரான அராஃபத் சன்னியை கன்னத்தில் அரைந்துள்ளார்.

மேலும் நேற்றுமுன்தினம் பலமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து புகார் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் கொடுக்கப்பட்டது. அந்த புகாரை விசாரித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி உள்ளதால் அவரை உடனே சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியது.

Shahadad 2

எனக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் அபராதம் விதித்து விதிக்கவும் அவர்கள் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement