சஸ்பெண்ட் மட்டுமல்ல. 5 ஆண்டு தடையும் குடுத்துட்டாங்க – நிர்வாகம் அதிரடி

Shahadad
- Advertisement -

பங்களாதேஷ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன் இவர் வங்கதேச அணிக்காக 51 ஒருநாள் போட்டிகள் 38 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது 33 வயதாகும் இவர் தேசிய அணியில் இடம் கிடைக்காமல் உள்ளூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

Shahadad 2

இந்நிலையில் பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி வரும் இவர் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் டாக்கா அணிக்காக விளையாடும் அவர் போட்டியின்போது தனது பந்துவீச்சை குறை சொல்லி தனது பந்து வீச்சு குறித்து விமர்சித்த அதே அணியைச் சேர்ந்த சக வீரரான அராஃபத் சன்னியை கன்னத்தில் அரைந்துள்ளார்.

- Advertisement -

மேலும் நேற்றுமுன்தினம் பலமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து புகார் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் கொடுக்கப்பட்டது. அந்த புகாரை விசாரித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி உள்ளதால் அவரை உடனே சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியது.

Shahadad 1

இந்நிலையில் அவர் மீது விழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் மேலும் அவரது மோசமான நடவடிக்கைப்போல் இனி எந்த நிகழ்வும் நடக்கக்கூடாது என்பதற்காகவும் பங்களாதேஷ் அணி நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை அவர் மீது எடுத்துள்ளது. அதன்படி இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் ரூபாய் அபராதமும் அதோடு மட்டுமின்றி 5 ஆண்டுகள் அவர் எந்தவிதமான போட்டியிலும் விளையாடக்கூடாது என்று கடுமையான தண்டனையை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement