இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தங்களது முதலாவது ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஷபாலி வர்மா நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை அற்புதமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியின் போது இந்திய மகளிர் அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர் ஷபாலி வர்மா 5 பந்துகளை மட்டுமே சந்தித்து 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆனாலும் அவர் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் வீராங்கனையாக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : இந்திய மகளிர் அணி டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதிக்கு கூட செல்லாது – அஷ்வின் கருத்து
நேற்றைய இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் வீசிய போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து பிரமாதமாக இன்னிங்க்ஸை துவங்கினார். இதன்மூலம் சர்வதேச மகளிர் டி20 உலக கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஷபாலி வர்மா நிகழ்த்தியுள்ளார்.



