2026 ஆம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரை வென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று இருப்பதால் இந்த தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த உலககோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றடைந்து அங்கு டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்வது கடினம் : ரவிச்சந்திரன் அஷ்வின்
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்து 170 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியை 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு சுருட்டியதால் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று இந்த தொடரில் நல்ல துவக்கத்தை கண்டுள்ளது.
இதனால் இந்திய அணி இனிவரும் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில் இந்திய மகளிர் அணியானது இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதே கடினம் என்றும் நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லாது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சுமாரான பேட்டிங்கையே வெளிப்படுத்தியது. 150 ரன்கள் மட்டுமே வரவேண்டிய இடத்தில் ரிச்சா கோஸின் அதிரடி காரணமாக கடைசியில் 20 ரன்கள் கூடுதலாக கிடைத்தன. அதேபோன்று பந்துவீச்சிலும் இந்திய அணியில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் தான் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது கடினம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமெனில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த வேண்டும்.
இதையும் படிங்க : ஆண்கள் அணியை தொடர்ந்து பெண்கள் அணியும் காட்டிய கெத்து.. பாக் அணிக்கெதிரான போட்டியில் – நடந்த நிகழ்வு
தென்னாப்பிரிக்க அணியிடம் தோற்று விட்டால் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மிக கடினம். அதேபோன்று நம்மிடம் வேகமாக வீசக்கூடிய பவுலர்கள் இல்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக இருந்தாலும் இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வேகமாக வீசும் பந்துச்சாளர்கள் கிடையாது. இந்த அணியை கொண்டு சென்றால் நிச்சயம் இந்தியா கோப்பையை வெல்லும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



