நான்கே போட்டியில் பெரும் சாதனையைப் படைத்த இளம் வீராங்கனை. பெண்கள் அணியின் சேவாக் இவர்தான் – விவரம் இதோ

Shafali
- Advertisement -

மகளிர் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலில் வெறும் நான்கு போட்டிகளில் அதிரடியாக ஆடி டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் 16 வயது வீராங்கனை ஷபாலி வர்மா. ஆஸ்திரேலியாவில் தற்போது மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

Shafali 2

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணிக்கு சேவாக் போன்று துவக்கத்தில் அதிரடியாக விளையாடும் வீராங்கனையாக அறிமுகமானவர் 16 வயது இளம் வீராங்கனை சபாலி வர்மா. இவர் 4 போட்டியில் உலக கோப்பை தொடரில் 160 ரன்கள் குவித்தார். இதன் மூலம் படிப்படியாக தர வரிசையில் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார் .

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் முதலிடத்தில் இருந்தார் . அவரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் சபாலி வர்மா. 16 வயது இளம் வீராங்கனையான இவரது ஆட்டம் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

Shafali 1

மேலும் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மிதாலி ராஜூக்கு பிறகு டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

நிச்சயம் ஷபாலி வர்மா பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை படைப்பார் என்பதில் ஐயமில்லை. மேலும் அவர் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement