டி20 கிரிக்கெட்டில் அவரால் 24 பந்துகளில் 24 விக்கெட்டுகள் எடுக்க முடியும் – ஷதாப் கான் புகழாரம்

Shadab
- Advertisement -

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 23 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளரான ஷதாப் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 6 டெஸ்ட் போட்டிகள், 51 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதைய பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே அசத்தலாக செயல்பட்டு வரும் ஷதாப் கான் தற்போது பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.

shadab 1

- Advertisement -

கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இவர் தற்போது தனது மிகச் சிறப்பான பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தற்போது சிறந்து விளங்கும் பவுலர் குறித்து அவர் வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு தற்போது மிகச் சிறப்பாக இருக்கிறது. ஏனெனில் மிடில் ஓவர்களின் போது எதிர் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் கைப்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் எனக்கு ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷித் கான் மற்றும் இலங்கை அணியை சேர்ந்த ஹசரங்கா ஆகியோரை மிகவும் பிடிக்கும்.

rashid

அதிலும் குறிப்பாக ரஷீத் கானால் டி20 கிரிக்கெட்டில் தான் வீசும் 24 பந்துகளிலும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவிற்கு திறமை உள்ளது. அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பாக பந்துகளை வீசி வருகிறார். அதோடு பேட்ஸ்மன்களுக்கும் அவரது பந்தை கணிப்பது என்பது மிகவும் கடினம்.

- Advertisement -

அந்த வகையில் அவர் அற்புதமாக செயல்பட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். அதேபோன்று மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக நான் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வருவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதேபோன்று பாகிஸ்தான் அணிக்காக பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டுலுமே எனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : IND vs WI : 3ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

எதிர்வரும் ஆசியா கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலுமே எங்கள் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement