IND vs WI : 3ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Yuzvendra-Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது.

Shardul-Thakur

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்த போட்டியில் யாருக்காவது அறிமுக வாய்ப்பு கிடைக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே இரண்டாவது போட்டியின் போது பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு ஆவேஷ் கானுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. அதைப்போலவே இன்றைய போட்டியில் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma Arshdeep Singh

இந்த ஒரு மாற்றத்தை தவிர இந்திய அணியில் பெரும்பாலும் வேறு எந்த மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளிலுமே ஒரே மாதிரியான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியிலும் இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து வேறு ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் ப்ரம்மாண்ட சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 10 பேட்ஸ்மேன்களைன் பட்டியல்

1) ஷிகார் தவான், 2) சுப்மன் கில், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement