இப்போவும் சொல்றேன், டி20 உ. கோ அணியில் அவரை கழற்றிவிட்டு பெரிய தப்பு பண்றிங்க – தேர்வுக்குழுவை எச்சரிக்கும் மதன் லால்

Madan Lal
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய விராட் கோலி தலைமையிலான இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் தயாராகி வருகிறது. அவரது தலைமையில் டி20 உலகக் கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி நடையை துவங்கியுள்ளது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

- Advertisement -

மேலும் இந்த தொடரிலிருந்து தான் இறுதிக்கட்ட உலகக்கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளதால் விமர்சனத்தை சந்தித்துள்ள விராட் கோலி, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. அந்த நிலைமையில் கடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 30 வயதை கடந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக புறக்கணிக்கும் தேர்வுக்குழு அதன்பின் அவருக்கு ஒரு டி20 போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படாமல் கழற்றி விட்டுள்ளது. அதிலும் ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதால் உங்களுக்கு இனிமேல் டி20 அணியில் வாய்ப்பு கிடையாது என்று வெளிப்படையாகவே தேர்வுக்குழு அவரிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறைத்து மதிப்பு:
அத்துடன் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் மட்டும் தேர்வு செய்யப் போவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் போன்றவர்கள் வயதை வெறும் நம்பராக பார்க்கும் அளவுக்கு மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி டி20 அணியில் விளையாடும் போது அவர்களை விட குறைவான 31 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஷமியை தேர்வுக்குழு கழற்றிவிட நினைப்பதற்கு நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

shami 1

குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்து பந்துவீச்சு துறையில் முக்கிய பங்காற்றிய அவரை வயதை காரணம் காட்டி டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தேர்வுக்குழு முத்திரை குத்தியுள்ளது. அதனாலேயே ஆசிய கோப்பையிலும் அவரை தேர்வு செய்யாமல் கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் மதன் லால் சாடியுள்ளார்.

- Advertisement -

பெரிய தவறு:
அதிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் அவரை வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாவிட்டால் அது தேர்வுக்குழு செய்யப்போகும் மிகப் பெரிய தவறாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஷமி நிச்சயமாக டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருக்க வேண்டும். அவர் பும்ராவுக்கு பின் நம்முடைய சிறந்த பந்துவீச்சாளர். நான் எப்போதுமே விக்கெட்டுகளை எடுத்து கொடுக்கும் பந்து வீச்சாளரை தான் விரும்புவேன்”

Madan-Lal

“ஏனெனில் குறைவாக ரன்களை கொடுக்க முயற்சிக்கும் பவுலர்களை டி20 கிரிக்கெட்டில் எப்படியாவது பேட்ஸ்மேன்கள் அடித்து விடுவார்கள். எனவே அவர்கள் ரன்கள் எடுப்பதை தடுப்பதற்கு ஒரே வழி விக்கெட் எடுப்பதாகும். அந்த வகையில் ஷமியை தேர்வு செய்யாவிட்டால் அது தேர்வுக்குழு மிகப்பெரிய தவறு செய்ததை போலாகிவிடும். மிகச்சிறந்த பவுலரான அவர் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

அவர் ஏன் டி20 கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு இப்போதும் புரியவில்லை. ஒருவேளை தற்போது விளையாடும் பவுலர்களை காட்டிலும் அவர் சுமாரானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால் உலகளவில் அவர் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்” என்று கூறினார்.

இதையும் படிங்க : தைரியம் இருந்தா என் முகத்து நேராக அதை சொல்லச்சொல்லுங்க பாப்போம் – சேவாக்க்கு சோயப் அக்தர் பதிலடி?

அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் முகமது சமி கடந்த 2015இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளராக அசத்தினார். அந்த வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ள அவரை விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாமல் போனால் அது தேர்வுக்குழுவின் மிகப்பெரிய தவறாக அமையும் என்று மதன் லால் எச்சரித்துள்ளார்.

Advertisement