எல்லாம் போதும். இனிமேல் ரன்கள் அடித்தால்தான் இடம் – விராட் கோலிக்கு எதிராக திரும்பும் அம்பு, வெளியான தகவல் இதோ

Kohli-1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. அதனால் 15 வருடங்களுக்கு பின் அந்நாட்டில் டெஸ்ட் தொடரை வெல்லும் அரிதான வாய்ப்பையும் இந்தியா கோட்டை விட்டது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் 3 நாட்கள் அசத்திய இந்தியாவை கடைசி 2 நாட்களில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

kohli 1

- Advertisement -

அப்போட்டியில் இந்தியா தோல்வியடைவதற்கு 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தோல்விக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறார். கடந்த வருடம் கேப்டனாக இந்தியாவுக்கு முன்னிலை பெற்று கொடுத்த அவர் இம்முறை பேட்ஸ்மேனாக அதை சிறப்பாக செயல்பட்டு பினிஷிங் செய்யாமல் தாம் பெற்றுக் கொடுத்த வெற்றியை தாமே வீணடிக்கும் வகையில் சுமாராக செயல்பட்டது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

தடுமாறும் விராட்:
கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவரைப்போலவே ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் சதங்களையும் அடித்து பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரம் முதுகெலும்பு பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அற்புதமாக எதிர்கொண்டு ஏற்கனவே 70 சதங்களை அடித்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள அவர் கடந்த 2019க்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களாக 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

kohli 4

இத்தனைக்கும் 3 வகையான இந்தியாவையும் பெங்களூருவையும் வழிநடத்திய அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்ததால் அந்த பதவிகளை படிப்படியாக ராஜினாமா செய்து கடந்த ஜனவரியில் இருந்து சாதாரண வீரராக விளையாடுகிறார். அதனால் அழுத்தமில்லாமல் சுதந்திர பறவையாக விளையாடும் அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட மோசமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

உச்சத்தில் பொறுமை:
அதனால் 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் வைத்த கோரிக்கையை ஏற்காத அவர் விளையாடினால் தானே பார்முக்கு வரமுடியும் என்று தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் முன்னேற்றத்தையும் காணாத அவர் இப்போது பார்முக்கு திரும்பிவிடுவார் அப்போது பார்முக்கு திரும்பி விடுவார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை போலவே இந்திய அணி நிர்வாகமும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. ஏனெனில் வரலாற்றில் அந்த அளவுக்கு அற்புதமாகவும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு விராட் கோலி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நன்றியை யாரும் மறக்கவில்லை.

அதனாலேயே கடந்த 3 வருடங்களாக சதமடிக்கவில்லை என்றாலும் பார்ம் என்பதைக் காரணமாகக் காட்டி இதுவரை ஒரு போட்டியில் கூட அவர் நீக்கப்படவில்லை. ஆனால் அந்த வாய்ப்பை 3 வருடங்களாக காப்பாற்ற தவறி வரும் அவர் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விட்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்க உள்ளார். இந்நிலையில் விராட் கோலி என்ற பெயருக்காக 3 வருடங்கள் பொறுமை காத்து கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் உச்சத்தை கடந்து விட்டதாக பிசிசிஐ கருதுகிறது.

- Advertisement -

திரும்பும் அம்பு:
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் தான் வருங்காலத்தில் வாய்ப்பு கொடுக்கும் முடிவை பிசிசிஐ பொறுமையிழந்து எடுத்து விட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு. “அவர் (விராட்) இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகச்சிறந்த சேவகன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது தொடர்ச்சியான தடுமாற்றம் மற்றும் சுமாரான பார்ம் தற்போது பலமாக ஒலிக்கிறது. இனிமேல் தேர்வு குழுவினர் பெயருக்காக யாரையும் தேர்வு செய்யக்கூடாது. நான் எந்த அதிகாரியுமில்லை ஆனால் விரைவில் அவர் தனது பார்மை மீட்டெடுக்க வேண்டும்”

kohli

“சிறப்பான செயல்பாடுகளா அல்லது பெரிய பெயரா என்பதை அவரது விஷயத்தில் முன்னோக்கி பார்க்க வேண்டியுள்ளது. ஒருவேளை இந்த இங்கிலாந்து தொடரில் அவர் ரன்கள் அடிக்கவில்லை என்றால் டி20 உலகக் கோப்பைக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்ய தேர்வு குழுவினர் முடிவு செய்யப் போகிறார்கள் என கருதுகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஹேப்பி பர்த்டே தல தோனி – இந்திய கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் விக்கெட் கீப்பர் இவர்தான் – ஏன் தெரியுமா?

இதற்குமுன் சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்கள் இதேபோல் தடுமாறியதால் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தனர். அதேபோல் தேர்வுக்குழுவினர் நீக்குவதற்கு முன்பாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement