- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியை தொடர்ந்து கங்குலிக்கும் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மிரட்டிய – சேவாக்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைசிறந்த கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதன் காரணமாக ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் நேற்று தோனியை ஏழு அதிசயங்களுடன் ஒப்பிட்டு வாழ்த்தியது போல தற்போது கங்குலியை வித்தியாசமாக வாழ்த்தி உள்ளார் சேவாக். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது :

- Advertisement -

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 56 இன்ச் கேப்டன் தாதா 56″ இஞ்ச் மார்பளவு, 8ஆம் நாள் 7ஆம் தேதி பிறந்த உங்களது பிறந்தநாளை பெருக்கினால் 56 வரும். மேலும் உங்களுடைய உலக கோப்பை போட்டிகளின் பேட்டிங் சராசரி 56. எனவே 56 இன்ச் கேப்டன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று வித்தியாசமான முறையில் கங்குலியை சேவாக் வாழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே நேற்று பிறந்த நாள் கொண்டாடிய டோனி ஏழு அதிசயங்கள் ஒப்பிட்டு வாழ்த்திய சேவாக்கின் பதிவும் தற்போது கங்குலியின் இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by