டெஸ்ட் கிரிக்கெட்டில் ஈஸியா பண்ண முடியாத ஒரு சாதனையை நீங்க பண்ணியிருக்கீங்க – சேவாக் வாழ்த்து

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 1 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய அவரது இந்த சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த சாதனைக்காக பாராட்டுக்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் குவிந்துவர இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கும் தனது பாராட்டினை அவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் சாதித்தது எவராலும் எளிதாக செய்ய முடியாத ஒன்று. ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் என்பது மிகச் சிறப்பான ஒன்று. இந்த நாள் உங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கும். மும்பையில் பிறந்து அதே மும்பையில் நீங்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது மிகப்பெரிய ஒன்று. வாழ்த்துக்கள் இனிவரும் காலங்களிலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று சேவாக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த வாழ்த்துக்கு பதிலளித்த அஜாஸ் படேல் சேவாக் உடனான ஒரு நினைவினை பகிர்ந்துள்ளார். அதன்படி ஒரு முறை தான் நெட் பவுலராக சேவாக்கிற்கு எதிராக பந்துவீசும் போது சேவாக் தனது பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தார் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : 10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு அஷ்வின் அளித்த பரிசு – வைரலாகும் புகைப்படம்

மும்பையில் பிறந்து இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அஜாஸ் படேல் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 10 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் என 14 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி உள்ளார். அதோடு இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement