சீனியர் வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு இவங்க 5 பேருக்கு வாய்ப்பு குடுங்க – சேவாக் வலியுறுத்தல்

Sehwag

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனை அடுத்து முக்கியமான கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த சூப்பர் 12-சுற்றில் ஒருவேளை ரன் ரேட் அடிப்படியில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தால் நிச்சயம் அரையிறுதியில் பங்கேற்கும்.

Rahul-2

இல்லையெனில் இந்த தொடரில் இருந்து வெளியேறும். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரானது வருகிற 17,19 மற்றும் 21 ஆம் தேதி இந்தியாவில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டி அக்டோபர் 25-ம் தேதியும், டிசம்பர் 3ஆம் தேதியும் துவங்குகிறது.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை இப்போதே நாம் தயார் செய்தாக வேண்டும்.

ஏனெனில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் நிச்சயம் நாம் அதனை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தந்து ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டிராவிட்டோட க்ளோஸ் பிரண்ட் அவர்தான். அவருக்கு தான் அந்த பதவி – பி.சி.சி.ஐ அதிரடி

மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தால் சில இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அதுமட்டுமின்றி அணியையும் தயார் செய்யும் வகையில் அந்த தருணம் அமையும். மேலும் கடந்த ஆறு மாதங்களாக குடும்பத்தை பிரிந்து இருக்கும் சில வீரர்களுக்கு ஓய்வு நிச்சயம் அவசியம் என்றும் சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement