டிராவிட்டோட க்ளோஸ் பிரண்ட் அவர்தான். அவருக்கு தான் அந்த பதவி – பி.சி.சி.ஐ அதிரடி

Dravid
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வர உள்ளதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடல் நடைபெற்று வந்தது. பின்னர் இறுதியில் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

shastri 1

- Advertisement -

இதனைத்தொடர்ந்து உலகக்கோப்பை தொடர் முடிந்து அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என்றும் தெரிகிறது. இந்நிலையில் தற்போது டிராவிட் பதவி வகித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவி காலியாக உள்ளது.

இளம் வீரர்களை பயிற்றுவிக்கும் முக்கிய இடமாக பார்க்கப்படும் அந்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவரையே பணியில் அமர்த்த வேண்டும் என்று பிசிசிஐ உறுதியாக உள்ளது. மேலும் இளம் வீரர்கள் உருவாகும் மிகவும் முக்கியமான இடம் அது என்பதால் அந்தப் பதவிக்கு திராவிடன் நெருங்கிய பழக்கத்தில் உள்ள ஒருவரை தலைவராக தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Laxman

அந்த வகையில் தற்போது விவிஎஸ் லக்ஷ்மன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தேர்வு செய்யப்பட இருப்பதாக பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக விவிஎஸ் லக்ஷ்மன் தேர்வு செய்ய பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் விரும்புகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி சார்பாக டி20 வரலாற்றில் மெகா சாதனையை நிகழ்த்திய பும்ரா – விவரம் இதோ

மேலும் பயிற்சியாளரான டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் இடையே நல்ல நட்பு இருப்பதால் நிச்சயம் அவர்கள் இருவரும் இந்திய அணியை புதிய இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்கிற காரணத்தினால் நிச்சயம் பிசிசிஐ அவரையே நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement