MS Dhoni : தோனியின் இந்த செயலுக்காக இரண்டு போட்டிகளில் அவரை தடை செய்ய வேண்டும் – சேவாக் அதிரடி

ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நோபால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து. அதிலும் குறிப்பாக மைதானத்திற்குள் நுழைந்து அம்பயருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்ட

Dhoni
- Advertisement -

ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நோபால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து. அதிலும் குறிப்பாக மைதானத்திற்குள் நுழைந்து அம்பயருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனியின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் தோனிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50% அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் தோனியின் இந்த செயலை விமர்சிக்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கும் தோனிக்கு எதிரான தனது கருத்துக்களை பேட்டியாக அளித்துள்ளார்.

அதில் சேவாக் கூறியதாவது : தோனி இதுபோன்ற வாக்குவாதத்தில் ஈடுபடும் செயலை முதல் முறையாக தற்போது தான் பார்க்கிறேன். இந்திய அணிக்காக அவருடன் நான் ஆடியவரை இந்திய அணிக்காக கூட அவர் இவ்வாறு நடந்துகொண்டதில்லை. அப்படி இருக்கையில் சென்னை அணிக்காக மட்டும் ஏன் தோனி இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.

Dhoni 1

களத்தில் ஏற்கனவே இரண்டு வீரர்கள் இருக்கும்போது அத்துமீறி உள்ளே நுழைவது தவறு. மேலும், அப்படியே இவருக்கு சந்தேகமிருக்குமெனில் வாக்கி டாக்கி மூலம் நான்காவது அம்பயரின் உதவியை நாடி இருக்க வேண்டுமே தவிர உரிமையை கையில் எடுத்து மைதானத்திற்குள் செல்வது மிகவும் தவறான காரியமாகும்.

Dhoni-2

தோனியின் இந்த செயல் பிற்காலத்தில் வரும் கேப்டன்களுக்கும் இவ்வாறு நடந்துகொள்ள வழிவகுப்பதாக உள்ளது. இதனால் அம்பயர்களின் முக்கியத்துவம் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்து தண்டனை கொடுக்க வேண்டும். அப்படி தண்டனை கொடுத்தால் மட்டுமே இப்படிப்பட்ட அத்துமீறல் குறையும் என தோனிக்கு எதிராக காட்டமாக பேசியுள்ளார் சேவாக்.

Advertisement