கோப்பையை ஜெயிக்கணுனா பெங்களூரு அணி இந்த மாற்றத்தை அணியில் செய்தே ஆகனும் – சேவாக் பளீர் பேட்டி

sehwag
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த தொடரில் நடைபெற்ற முதல் நான்கு போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பின்னர் கடைசி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி தோல்வி பெற்ற அதற்கு மிக முக்கிய காரணம் பேட்டிங்கில் சிறு தடுமாற்றம் ஏற்படுவதால் தான். எனவே விராட் கோலி இந்த மாற்றத்தை ஏற்படுத்தினால் நிச்சயமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்பு போல சிறப்பாக விளையாட முடியும் என்று சிறிய அறிவுரையாக சேவாக் சமீபத்தில் கூறியுள்ளார்.

- Advertisement -

கடந்த மூன்று போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்கத்தில் ரன்கள் குவிக்க திணறி வருகிறது. படிக்கல் ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார் மற்ற போட்டிகளில் ரன் குவிக்க தவறி விடுகிறார். பட்டிதார் அவ்வளவு வேகமாக விளையாட இல்லை, மிகவும் சிரமப்பட்டு விளையாடுவது போல் தெரிகிறது.

எனவே விராட் கோலி பழையபடி மூன்றாம் இடத்தில் வந்து விளையாட வேண்டும் அதுதான் அவருக்குரிய இடம். இனி வரும் போட்டிகளில் விராட் கோலி பழையபடி மூன்றாம் இடத்தில் தான் விளையாட வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பட்டிதாரை அணியில் இருந்து நீக்கிவிட்டு முகமது அசாருதீனை அணியில் விளையாட வைக்க வேண்டும். படிக்கல் மற்றும் முகமது அசாருதீன் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும். அவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். எனவே அவர்கள் இருவரும் துவக்கத்தில் ரன்கள் அடிக்க, அதற்குப் பின்னர் விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் இருக்கையில் பெங்களூரு அணியின் பேட்டிங் வலிமை சற்று அதிகப்படும்.

Azharudeen

இந்த மாற்றத்தை விராட்கோலி செய்தால் நிச்சயமாக பெங்களூரு அணி மற்ற அணிகளுக்கு சவால் வாய்ந்த அணியாக திகழும். எனவே இந்தக் கருத்தை விராட் கோலி தனது மனதில் வைத்துக் கொண்டு வெகு சீக்கிரமாக நடக்க இருக்கும் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சேவாக் வலியுறுத்தியுள்ளார். பெங்களூரு அணி அடுத்ததாக கொல்கத்தா அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

Advertisement