8 வருஷம் ஆகியும் இதை என்னால மறக்கமுடியல. இதை நான் ஆரியபட்டாவுக்கு சமர்ப்பிக்கிறேன் – சேவாக் பதிவு

virender sehwag

ட்விட்டரில் எப்போதும் தனது கருத்துக்களை அர்த்தமுள்ளதாகவும் அதேநேரத்தில் கிண்டலாகவும் பதிவு செய்வதில் இந்திய அணி முன்னாள் வீரர் சேவாக்கை அடித்துக் கொள்ள வேறு ஆள் இல்லை என்பதை சேவாக் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

sehwag

இந்த விடயம் என்னவெனில் இ8 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக இதே நாளில் நடைபெற்ற விடயம் குறித்து நியாபகம் வைத்து அவர் தற்போது 2011இல் தனக்கு நடைபெற்ற அனுபவத்தைப் பற்றி ட்விட்டரில் ஒரு பதிவினை இட்டுள்ளார். அதில் ஆகஸ்ட் மாதம் 10,12 தேதிகளில் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை பற்றிய பதிவுதான் அது.

இங்கிலாந்துக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேவாக் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகினர். தன்னுடைய இந்த டக்கினை (0) ஜீரோவை கண்டுபிடித்த இந்திய மேதையான ஆரியபட்டாவுக்கு விருப்பமில்லாமல் சமர்ப்பிப்பதாக கிண்டலாக கூறியுள்ளார்.

2 நாட்கள் பயணம் செய்து 188 ஓவர்கள் பீல்டிங் செய்த பின்னர் இங்கிலாந்து எதிரான போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் நான் பெற்ற இந்த ஜீரோவினை விருப்பமில்லாமல் என்னுடைய மரியாதையை ஆரியபட்டாவுக்கு செலுத்தினேன் என்று கிண்டலாக அவர் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -