ராயுடுவின் அதிரடியை பார்த்து அசந்து போய் அடுத்த நிமிடமே ட்வீட் செய்த சேவாக் – விவரம் இதோ

rayudu 3
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியானது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று முடிந்தது. இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சாம்பியன் அணிகளாக விளங்குவதால் இப்போட்டியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.

cskvsmi

- Advertisement -

இப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்தது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கெய்க்வாட் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பிறகு டு பிளசிஸ் மற்றும் மோயின் அலி ஜோடி சிறப்பாக விளையாடி 2 ஆவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மொயின் அலி 58 ரன்கள் எடுத்து நிலையிலும், டுப்லஸ்ஸிஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ராயுடு மற்றும் ஜடேஜா சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர்.

rayudu 1

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராயுடு 27 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 4 பவுண்டரி என 72 ரன்கள் அடித்து மும்பை அணியை மிரள விட்டார். இந்நிலையில் ராயுடுவின் இந்த அதிரடியை கண்ட சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் :

அவர் ஆர்டர் செய்த 3D கிளாஸ் எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். ராயுடுவிடம் இருந்து பிரமாதமான ஒரு ஹிட்டிங் இந்த போட்டியில் வந்திருக்கிறது. சென்னை அணிக்கு இது ஒரு நல்ல சீசன் என சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement