இவங்க விளையாடுறத பாத்தாலே ரொம்ப போரா இருக்கு. இனிமே சுத்த வேஸ்ட் – கலாய்த்த சேவாக்

sehwag

நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணியில் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொண்டன. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் விளையாடியது, 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கில் 38 பந்துகளில் 43 ரன்கள், முதலில் குவித்தார் ரசல் 27 பந்துகளில் 45 ரன்கள் குவித்தனர். கடைசி நேரத்தில் ரசல் அதிரடியாக விளையாட கொல்கத்தா அணியால் 154 ரன்கள் குவிக்க முடிந்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி கொல்கத்தா அணியை பந்தாடியது என்றுதான் சொல்ல வேண்டும்.

russell

வெறும் 16.3 ஓவரில் கொல்கத்தா நிர்ணயித்த இலக்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக 47 பந்துகளில் 82 ரன்கள் ஷா குவித்திருந்தார், அவரை தொடர்ந்து ஷிகர் தவான் 47 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டி முடிந்து பேசிய முன்னாள் வீரர் சேவாக், கொல்கத்தா அணி ஆரம்பத்திலிருந்தே அதே தவறை செய்து கொண்டு வருகிறது. பேட்டிங்கில் சொதப்புவது மட்டுமல்லாமல் பௌலிங் மற்றும் பில்டிங் என அனைத்து விஷயத்திலும் அந்த அணி தொடர்ந்து சொதப்பி கொண்டே வருகிறது.

அந்த அணியின் ஆட்டத்தை விரும்பி பார்க்க முடியவில்லை. எப்படி ஒரு படத்தில் சுமாரான காட்சிகள் வந்தால் நாம் ஓட்டி பார்ப்போமே அதைப்போலத்தான் இனி கொல்கத்தா விளையாடும் ஆட்டத்தை நாம் ஓட்டி பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு அந்த அணியில் ஒரு துடிப்புடன் விளையாட தவறிவிட்டது. கொல்கத்தா அணியின் ஓபனிங் வீரர்கள் ராணா மற்றும் கில் ஒரு அளவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அது அந்த அணிக்கு போதுமானதாக படவில்லை.

rana

குறிப்பாக இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சற்று அதிரடியாக விளையாடினாலும், அதை பெரிய இன்னிங்ஸ்சாக மாற்றக் கூடிய திறமை இவர்கள் இருவருக்கும் இல்லை. இவர்களாவது பரவாயில்லை இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி கொண்டே வருகின்றனர். அந்த அணியில் ஒரே ஆறுதல் வீரர் ரசல் மட்டும்தான். அவர் மட்டும் தான் மிகவும் சீரியஸாக விளையாடி வருகிறார். அவரை அவரது அந்த அணி கொஞ்சம் முன்னரே விளையாட வைக்க வேண்டும், அதையும் அந்த அணி செய்யவில்லை.

- Advertisement -

Morgan

அவருக்கு முன்னர் நரேன் மற்றும் மோர்கன் ஆகியோரை அந்த அணி இறக்கி விடுகிறது. இவ்வாறு தொடர்ந்து பல தவறுகளை கொல்கத்தா அணி செய்து கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் நேற்று கொல்கத்தா அணி விளையாடிய விதத்தை நான் மிகவும் வெறுத்துப் போய் பார்த்தேன். நேற்றைய போட்டியை நான் ஓட்டி தான் பார்த்து இருந்திருக்க வேண்டும். இனி வரும் போட்டிகளில் நான் ஓட்டி தான் பார்ப்பேன் என்று நக்கல் துணியில் சேவாக் கூறியுள்ளார்.