சாம்பியன் அணியாக இருந்தாலும் மெத்தனமாக இருந்தால் எல்லாம் பாழாகிடும் – சேவாக் எச்சரிக்கை

sehwag
- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்த வருடம் ஜாம்பவான்கள் எல்லாம் சொதப்பி கொண்டிருக்கின்றனர். மூன்று முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8-வது இடத்திலும் இரண்டு முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி நான்காவது இடத்திலும் இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

Kkr

- Advertisement -

இதிலும் மூன்று போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது அந்த அணியின் திறமையால் இல்லை எதிரணி செய்த தவறினால் தோல்வியடைந்தது. அந்த அணியின் பந்துவீச்சை யூனிட் மிகச் சிறப்பாக இருக்கிறது. சுனில் நரைன், பேட் கம்மின்ஸ், லாகி ஃபர்குசொன் போன்ற அபாரமான வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் பேட்டிங்கில் திறமையானவர்கள் இருந்தாலும் சரியாக அவர்களை பயன்படுத்த முடியவில்லை. சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் எதிரான போன்ற சர்வதேச தரத்திலான வீரர்கள் இருந்தாலும் அதனை தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்குப் பதிலாக இயான் மார்கன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

morgan

இப்படி இந்த அணி ஒரு சர்ச்சைக்குரிய அணியாகவே இருந்து வருகிறது. இது குறித்து பேசிய விரேந்தர் சேவாக் அந்த அணியை கடுமையாக விமர்சித்தார் அவர் கூறுகையில்…நீங்களும் சிறப்பான அணிதான் அணியில் திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களை உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

- Advertisement -

சுப்மன் கில் துவக்க வீரராக இருந்தால் அவர் அடித்து ஆட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரது ஆர்டர் மாற்றி கொடுக்கப்பட வேண்டும். ராகுல் திரிபாதி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். இயான் மார்கன் இன்னும் முன்னதாக வந்து ஆடவேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் தான் கொல்கத்தா அணி மிகச்சிறப்பான அணியாக இருக்க முடியும்

Tripathi

இல்லைஎன்றால் அது வரை உங்கள் அணியும் துண்டு துக்கடா அணியாக தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் வீரேந்தர் சேவாக்.

Advertisement